மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது

 


@@@

மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது

---------------------------------------------------------

தமிழ் நாட்டின் மகாகவி தமிழன்பன் அவர்களின் பெயரில் வழங்கப்படும் மிக மதிப்புக்குரிய விருது மகாகவி ஈரோடு தமிழன்பன் விருது எழுத்துதளம் நிர்வாகி திரு அகன் அவர்களின் அயராத உழைப்பின் மூலம் இலங்கைக்கு இந்த பரிசு கேடயம் இன்று கிடைக்கபெற்றேன். இது என் எழுத்து பணிக்கு கிடைத்த பெரும் கெளரமாக மதிக்கிறேன்

அன்புடன்

கவிப்புயல் இனியவன்

கவி நாடியரசர் இனியவன் ( இதுவும் எழுத்து தளத்தால் வழங்கப்பட்ட புனைபெயர்)

என் படைப்புகள்

கவிப்புயல் இனியவன் செய்திகள்

அனைத்து கவி ஆர்வலர்களுக்கும்

எழுத்து தள உறுப்பினர்களுக்கும்

நன்றி கூறுகிறேன்.

....

எனது Profile பார்வையாளர்கள் 50000

பேரை கடந்து விட்டது. அத்தனை ஆர்வலருக்கும் மீண்டும் நன்றி

...

எனது கவிதை தளத்தின் முதல் தளம்

எழுத்து தளம் என்று பலமுறை குறி

உள்ளேன். இத் தளம் "ஈரோடு தமிழன்பன் " விருது வழங்கி கவுரவம் செய்தது. அத்துடன் "கவிநாட்டியரசர் " பட்டமும் வழங்கியது அனைத்துக்கும் நன்றி

...

கவிப்புயல் இனியவன்

மேலும்

பகிரு

புத்துணர்வான நேரம்...

குளிர்ச்சியான நேரம்...

இறைத்தன்மையான நேரம்...

பிராணசக்தி மேலோங்கிய நேரம்...

தியானத்துக்கான நேரம்..

வெற்றி கிடைக்கும் நேரம்...

திருமணத்துக்கான நேரம்...

யாகம் செய்யும் நேரம்...

சாதனைக்கான நேரம்...

கிரகதோஷம்அற்றநேரம்

அதுவே....

பிம்மமுகூர்த்த நேரம்... !

மேலும்

பகிரு

சரகலை என்பது மூச்சுக்கலை "சரம் " என்பது "மூச்சு"ஆகும். இந்த மூச்சு சூரியகலை, சந்திரகலை, சுழுமுனை, என்று நடைபெறும். இந்த ஓட்டத்தை எம் விருப்பம் போல் மற்றும் பயிற்சியே சரகலை ஆகும். இதை ஒரு குரு மூலம் கற்பதே சிறந்தது. அடியேன் தமிழ்நாடு சித்த வைத்திய வித்தர் S. காந்தி என்பவரிடம் கற்றேன். இதில் என்ன பயன்? என்று நீங்கள் கேட்டால். இன்றைய கொரோனா வுக்கு தற்பாதுகாப்பே இது தான்..

....

பேச்சை குறை மூச்சை பிடி.. எல்லாம் வெற்றி.....

....

என்னால் முடிந்த அளவு சுருக்கமா இதை கவிதை வடிவில் முயற்சி செய்கிறேன். தொடர்ந்து

பாருங்கள்.....

கவிப்புயல் இனியவன்

மேலும்

பகிரு

நிலத்தை நேசியுங்கள்...

வம்சம் விருத்தியாகும்....!

நீரை நேசியுங்கள்...

செல்வம் விருத்தியாகும்.!

நெருப்பை நேசியுங்கள்..

ஆரோக்கியம் விருத்தியாகும்... !

காற்றை நேசியுங்கள்...

ஆயுள் விருத்தியாகும்.. !

விண்ணை நேசியுங்கள்..

அறிவு விருத்தியாகும்... !!!

@

கவிப்புயல் இனியவன்

03.12.2020

மேலும்

பகிரு

வெற்றி -தன்னம்பிக்கை கவிதை

-------------------------------------------------

தூங்கி கொண்டிருப்பவனுக்கு

சோம்பல் வெற்றி

விழித்திருப்பவனுக்கு

வாழ்க்கை வெற்றி

வெற்றி என்பது

எட்டி பார்க்கும் விடயமோ

எட்டி பறிக்கும் விடயமோ

இல்லையடா....!!

எது ..? வெற்றி ..?

தினம் தோறும் உழைக்கும்

மனமும் ஆற்றலும் உள்ளவன்

தினமும் வெற்றி பெறுகிறான் ...!!!

மேலும்

நன்றி நன்றி

உண்மை ஆயிரம் உரைத்தமைக்கு நன்றி அருமை

பகிரு (1)

கவிதையோடு வாழ்பவனும்....

கவிதையாக வாழ்பவனும்....

கவிஞன்........!

கண்டதை எழுதுவதும்....

கண்டபடி எழுதுவதும்....

கவிதையில்லை.......

கண்ணியமாய் எழுதுபவன்.....

கவிஞன்........!

காதலால் .............

கவிதை வரும் என்பதை....

காட்டிலும்...........

காதலோடு கவிதை......

எழுதுபவன் உண்மை.....

கவிஞன்..........!

சமூக ......

சீர்திருத்தத்துக்காய்.....

கவிதை எழுதுவதைவிட....

சமூகத்திலிருந்து......

சீர்திருந்தி வாழ கவிதை.....

கவிதை எழுதுபவன்.....

கவிஞன்...........!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கவிப்புயல் இனியவன்

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கவிதையோடு வாழ்பவனும்....

கவிதையாக வாழ்பவனும்...

மேலும்

மிக்க நன்றி நன்றி

நன்று...

பகிரு

இனியொரு விதி செய்யோம்- ஆச்சிமசாலா வாங்குவோம்

---------------------------------------------------------------------

பாரதியாரின் புரட்சி கவி மசாலா விற்கிறது. வேதனையிலும் வேதனைஇதை தமிழ் ஆர்வலர்கள். கவிஞர்கள் ஏன் கண்டுகொள்ள வில்லையோதெரியாது. தமிழ் நாட்டில் தமிழுக்காக குரல் கொடுக்கும் யாருடைய கண்ணிலும் காதிலும் ஏன் இது விழவில்லை. தமிழே என் மூச்சு என்று சொல்லும் கவிகள் புரட்சி பாடல் இப்படி கொச்சை படுத்துவதை ஏன் கவனிக்க தவறினர்..?

இந்த விளம்பரம் 4 முதல் 5 வயது குழந்தையை பெரிதும் பாதிக்கும். இன்னும் சிலகாலத்தில் ஒரு குழந்தையிடம் சிறிது வளர்ந்த பிள்ளையிடம் ....இனியொரு விதி செய்யோம் ...அடுத்த வரி

மேலும்

ம்ம் நன்றாக புரிகிறது

அவர்கள் வேண்டாம் என்பது இன்னும் சிக்கல்...நன்கு யோசியுங்கள்...புரியும்

மன்னிக்கவும் கமலும் ரஜனியும்

பணத்துக்காய் எல்லாம் போகுது பிறகு கமழும் ராயணியும் சிஸ்ரம் சரியில்லை என்கிறார்கள்

பகிரு (2)

தேர்த் திருவிழா

-----------------

நினைத்து பார்க்கிறேன்....

கோயில் திருவிழாவை....

பத்து நாள் திருவிழாவில்....

படாத பாடு பட்டத்தை ...!

முதல் நாள் திருவிழாவிற்கு....

குளித்து திருநீறணிந்து....

பக்திப்பழமாய் சென்றேன்...

பார்ப்பவர்கள்.....

கண் படுமளவிற்கு....!

இரண்டாம் நாள் திருவிழாவில்...

நண்பர்களுடன் கோயில் வீதி.....

முழுவதும் ஓடித்திரிவதே வேலை.....

பார்ப்பவர்கள் எல்லோரும்.....

திட்டும் வரை ....!

மூன்றாம் நாள் திருவிழாவில்....

நண்பர்கள்மத்தியில் ....

மூண்டது சண்டை .....

கூட்டத்துக்குள்.....

மறைந்து விளையாட்டு ....!

நாளாம் நாள் திருவிழாவில்....

நாலாதிசையும் காரணமில

மேலும்

உண்மை உண்மை நன்றி நன்றி

உண்மை உண்மை நன்றி நன்றி

வாழ்க்கையின் கடந்து போன காலங்கள் யாவும் விலை மதிப்பெற்ற அனுபவமெனும் பொக்கிஷம் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

அழகான......நினைவுகள்........

பகிரு (2)

புள்ளிகளையும்.......

கோடுகளையும் ........

என் மனசுக்குள்

போட்டுக்கொண்டு ..

இருக்கிறேன் ...

கோலம் போடவில்லை .....!!!

பூவை உன்

தலையில் சூட ...

நீண்ட நாளாக ...

ஏங்கிக்கொண்டு ....

இருக்கிறேன் ........

நீ அருகில் வருவதில்லை ......!!!

காதலில்

வலி கொடுமையானது......

அதிலும் ஒருதலை காதல் .....

கொடூரமானது .........!!!

&

ஒருதலை காதல் வலிகள்

கவிப்புயல் இனியவன்

மேலும்

நன்றி நன்றி கருத்துக்கு நன்றி

நன்றி நன்றி கருத்துக்கு நன்றி

நன்றி நன்றி கருத்துக்கு நன்றி

உண்மைதான்..

பகிரு (2)

மின்னலை பார்த்தால் .....

கண் கெட்டுவிடும் ....

என் கண்ணில் நீ ....

பட்டாய் நான் .......

பட்டுவிட்டேன் ....!!!

மதுவை விட போதை நீ .....

மது உயிரை குடிக்கும் ....

நீயோ............

உயிரை வதைக்கிறாய் .....!!!

காதலை .....

ஆரம்பித்ததும் நீ ....

முடித்ததும் நீ ......

நான் என்ன பாவம் ....

செய்தேன் ......?

&

முள்ளில் மலர்ந்த பூக்கள்

கஸல் கவிதை

கவிப்புயல் இனியவன்

1042

மேலும்

ம் ம் ம் நன்றி நன்றி

ஒருநொடி வந்துசென்றாள் ஒவ்வொரு நொடியும் வலிகள் இதயத்தில் ....

நன்றி நன்றி

நன்றி நன்றி

பகிரு (5)

நீ

சொன்ன ஒரு வார்த்தை....

ஆயிரம் கஸல் கவிதையை ...

தோற்றிவிட்டது ....!!!

சுதந்திர பறவைகளை ...

திறந்த சிறைச்சாலைக்குள் ....

அடைத்துவிடும் ....

காதல் ......!!!

இதயங்களை ....

இணைக்கும் ....

சங்கிலி -காதல் ...

துருப்பிடிக்காமல் ....

பார்த்துக்கொள் .....!!!

முள் மேல் பூ அழகானது .....

என் இதயத்தில் பூத்த ....

முள் பூ நீ ................!!!!

நீ

காதலோடு......

விளையாட வில்லை ....

என்

மரணத்தோடு .....

விளையாடுகிறாய் ......!!!

^

இது எனது 1000 கஸல் இத்தனை காலமும்

ஊக்கம் தந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்

உளமான நன்றி

^

அடுத்து புதியதோர் கஸல் தொடர் ஆரம்பிக்கிறேன்

மேலும்

வாழ்த்துக்கு நன்றி நன்றி

வாழ்த்துக்கு நன்றி நன்றி

வாழ்த்துக்கு நன்றி நன்றி

வாழ்த்துக்கு நன்றி நன்றி

பகிரு (10)

இட்ட முட்டை சுடுகிறது

எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்

ஏக்கத்தோடு பார்த்தது கோழி

^^^

கடத்தல்காரன் கையில் பணம்

வன அதிகாரிகள் பாராமுகம்

ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம்

^^^

காடழிப்பு

ஆற்று நீர் ஆவியானது

புலம்பெயரும் அகதியானது கொக்கு

^^^

குடும்ப தலைவர் மரணம்

ஒன்பது பிள்ளைகளும் ஓலம்

கருத்தடை செய்த நாய் சாபம்

^^^

சட்டம் ஒரு இருட்டறை

கருவறை இருட்டறை

சிசு மர்மக்கொலை

^^^^^

வியர்வை சிந்தாமல் வேண்டாம்

வியர்வை உலர்ந்தபின் வேண்டாம்

ஊதியம்

@

கண் வரைதல் ஓவிய போட்டி

முதல் பரிசு பெற்றான் மாணவன்

பார்வையற்ற மாற்றுத்திறனாளி

@

தொட்டிக்குள் இலை குவிகி

மேலும்

மிக்க நன்றி நன்றி

அனைத்து ஹைக்கூவுவும் அருமையோ அருமை

மிக்க நன்றி நன்றி ரசனையுடன் கருதுரத்தமைக்கு நன்றி

வியர்வை சிந்தாமல் வேண்டாம் வியர்வை உலர்ந்தபின் வேண்டாம் ஊதியம் அருமையான கருத்துடன் வரிகள் !

பகிரு (23)

மேலும்...

கருத்துகள்

கருத்து சேர்க்க Login செய்யவும்

பழனி குமார் • 16-Nov-2017 7:07 am

அன்பு நண்பருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க நூறாண்டு ஆற்றிடுக தமிழ் தொண்டு தொடர்ந்து

கவிப்புயல் இனியவன் • 16-Nov-2017 6:44 pm

மிக்க நன்றி

அன்பான வாழ்த்துக்கு

இனியவனின்

அன்பு வாழ்த்துக்கள்

வேலாயுதம் ஆவுடையப்பன் • 14-Sep-2015 4:16 am

கவிதைகள் தேன் மழை தென்றலாக விளக்கமாக உள்ளது

பாராட்டுக்கள்

முஸ்பீர் • 22-Dec-2015 5:39 pm

மிக்க நன்றி நன்றி

முஸ்பீர் • 22-Dec-2015 5:41 pm

நம்ம தல அவர்

கவிப்புயல் இனியவன் • 22-Dec-2015 6:06 pm

மிக்க நன்றி

கவிப்புயல் இனியவன் • 16-Nov-2017 6:45 pm

மிக்க நன்றி

அன்பான வாழ்த்துக்கு

இனியவனின்

அன்பு வாழ்த்துக்கள்

கோபி சேகுவேரா • 17-Nov-2014 2:05 am

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தோழரே....

கவிப்புயல் இனியவன் • 22-Dec-2015 6:06 pm

நன்றி நன்றி

A. Prem Kumar • 16-Nov-2014 11:59 pm

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், தோழரே.

கவிப்புயல் இனியவன் • 22-Dec-2015 6:06 pm

நன்றி நன்றி

பழனி குமார் • 16-Nov-2014 7:03 am

இன்று பிறந்த நாள் காணும் என் அன்பு சகோதரர் , கே இனியவன் அவர்களே ....

என்றும் நலமோடும் வளமோடும் மன அமைதியோடும் புகழோடும் புண்படா நெஞ்சோடும்

ஆற்றல் பெருகி கடல் போல எங்களுக்கு அள்ளித்தந்த பல கவிதைகள் போல

அளவிடா இயலா பெருங்கடலாய் இன்னும் மேல கவிதைகள் வழங்கி

பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகிறேன் ....

கவிப்புயல் இனியவன் • 22-Dec-2015 6:06 pm

நன்றி நன்றி

பாலா • 12-Nov-2014 7:06 am

நான் புதிதாக இணைந்துள்ளேன் என் கவிப்பிழைகளை திருத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இணுவை லெனின் • 02-Nov-2014 4:43 am

வணக்கம் ஐயா நான் புதிதாக

இணைத்துள்ளேன் என்

கவிதையின் குறைகளை

கூறுங்கள்

பாலவேலாயுதம்மு • 28-Oct-2014 6:55 pm

அனைத்துமே இனியவை அய்யா

கவிப்புயல் இனியவன் • 30-Oct-2014 6:47 pm

நன்றி தங்கள் கருத்துக்கு நன்றி

வே புனிதா வேளாங்கண்ணி

• 22-Oct-2014 10:57 am

தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் தோழமையே..

கவிப்புயல் இனியவன் • 30-Oct-2014 6:47 pm

நன்றி தங்கள் கருத்துக்கு நன்றி

snehapriya • 13-Mar-2014 10:06 am

nalla varigal!!!

பழனி குமார் • 17-Nov-2013 2:02 pm

இனியவனின் கவிதைகளும் , இனிய உள்ளத்தையும் என்றும் நான் மதிப்பவன் . உங்கள் கவிக்கு குவியும் பாராட்டையும் வாழ்த்தையும் நான் என் முகநூல் வழியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் ,உண்மைதான் . தொடருங்கள் உங்கள் பணியினை. வாழ்த்துக்கள் .

கவிப்புயல் இனியவன் • 17-Nov-2013 3:46 pm

அன்பின் அண்ணா எனக்கு உண்மையில் கணனி பற்றிய அறிவு

குறைவு ஏதோ எழுதுவேன் பதிவேன் ..

புதிய விடயங்கள் வந்தால்

தெரியாது பார்வையிட . மேலும் தங்களின் அன்புக்கு வார்த்தையே

இல்லை விளக்குவதற்கு அன்பு மட்டுமே இன்பம் . அதுதான் என் கவிதைகள் காதலாக உள்ளன ...!!!

நிறைய பேசனும் போல் இருக்கு வார்த்தை வருகிதில்லை

நன்றி

பழனி குமார் • 17-Nov-2013 1:56 pm

மன்னிக்கவும் . நேற்றே வாழ்த்திருக்க வேண்டும் . உடல்நிலை சரியில்லை.

உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

விரைவில் ஈழத்தமிழர்க்கு விடியல் பிறந்திடவும் , நீங்கள் என்றும் உடல் நலமோடும் , மன அமைதியோடும் நெடுங் காலம் வாழ்ந்திட வாழ்த்துக்கள் இனியவன் அவர்களே .

என்றும் நட்புடன்

பழனி குமார்

கவிப்புயல் இனியவன் • 17-Nov-2013 2:04 pm

நன்றி மிக்க சந்தோசம்

ஈழத்தமிழர்க்கு விடியல் பிறந்திடவும்

என்ற வாழ்த்துக்கும் சேர்த்து நன்றி

குருசாமி பழனி • 26-Jun-2013 1:10 pm

உங்கள் சிந்தனைகள்...ஐயா...

கவிப்புயல் இனியவன் • 27-Jun-2013 1:06 pm

மீதி ..?

கவிப்புயல் இனியவன் • 01-Sep-2013 9:51 am

நன்றி தங்கள் கருத்துக்கு நன்றி

மின்கவி • 20-May-2013 8:54 pm

அன்பரே!

தங்களின் நட்புக்கு அனேக நன்றிகள் .

இணைப்பில் இருப்போம் ,

கருத்து பகிர்வோம் ,நன்றிகள் .

கவிப்புயல் இனியவன் • 21-May-2013 6:13 pm

நன்றிகள்

கவிப்புயல் இனியவன் • 08-May-2013 9:21 pm

இந்த கருத்து நீக்கப்பட்டுள்ளது

கவிப்புயல் இனியவன் • 08-May-2013 9:34 pm

இந்த கருத்து நீக்கப்பட்டுள்ளது

VAIGAIMANI • 07-May-2013 10:16 am

வணக்கம் ஐயா உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை. நானும் கவிதை எழுதிவுள்ளேன் நம்முடைய தளத்தில் நீங்கள் பார்த்து எவ்வாறு இன்னும் சிறப்பாக எழுத ஆலோசனை வழங்கவும் நன்றி

கவிப்புயல் இனியவன் • 07-May-2013 9:43 pm

அன்பின் வைகைமணி அவர்களே...

உங்கள் பாராட்டுக்கு நன்றி ...

உங்கள் கவிதையை நிச்சயம் படிப்பேன் ..

கருத்து தருவேன் -நன்றி

கவிப்புயல் இனியவன் • 03-May-2013 11:26 pm

அன்பு மிக்க எனது தற்போதுவரை 242 எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ..!உங்களின் அன்பான ஆதரவே என்னை ஊக்கி விற்கிறது ...

தொடர்ந்தும் தாருங்கள் தொடர்ந்தும் தரமாக எழுதுவதற்கு ...

நன்றி வணக்கம்

கவிப்புயல் இனியவன் • 23-Apr-2013 5:46 am

அன்பு மிக்க எனது தற்போதுவரை 237 எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ..!உங்களின் அன்பான ஆதரவே என்னை ஊக்கி விற்கிறது ...

தொடர்ந்தும் தாருங்கள் தொடர்ந்தும் தரமாக எழுதுவதற்கு ...

நன்றி வணக்கம்

முஸ்பீர் • 11-Apr-2013 7:19 pm

அன்பின் இனியவரே உங்களின் ஆயுள் ரசிகன் நான் ...

உங்களின் பலகவிதையை பார்த்து கருத்து சொன்னேன் ..

பதில் வரவில்லை ...

தங்களின் வேலை பளுவோ .../

பார்க்கவிளைலையோ தெரியாது ...

எனக்கு sms கவிதை தினம் தோரும் தரமுடியுமா ..?

எனது நண்பர்கள் எல்லோரும் உங்கள் நண்பர்கள் விசிறிகள் ..

கவிதைகளை சொல்லவே தேவையில்லை அருமை பிரமாதம் சூப்பர் ............................!!!!!!!!!!

கவிப்புயல் இனியவன் • 12-Apr-2013 2:46 pm

நீங்கள் ரசிப்பதற்கு நன்றி ...

உங்கள் பாராட்டுக்கும் நன்றி ..

என்னால் முடிந்த அளவுக்கு SMS கவிதை தருகிறேன் ....நன்றி

கவிப்புயல் இனியவன் • 11-Apr-2013 2:40 pm

அனைத்து என் வாசகர்களுக்கும் ...

அபிமானிகளுக்கும் ...

ஆதரவாளர்களுக்கும் ...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் ....

நீங்கள் தரும் ஆதரவே இத்தனை கவிதைகளை உருவாக்க உதவுகின்றது தொடர்ந்து தாருங்கள் ..தொடர்ந்து கவிதை எழுத...

நன்றியுடன் ..கே இனியவன்

Comments

Popular posts from this blog

கவி அருவி என்றும் உங்களைச் சொல்ல முயுடிம்

ஒரு தளத்தில் மகா கவி - என்கிறார்கள்

இனியவனுக்கு